search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

    திண்டிவனம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

    • திண்டிவனம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • பணத்தை இழந்து பலர் நடுத்தெருவில் தவிக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுவதாக போலீ சாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பெயரில் திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக்குப்தா மேற்பா ர்வையில், உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சி ரோடு அருகே சந்தே கத்திற்கிட மான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசார ணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்தனர். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் நேரடியாகவும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் திண்டிவனம் நடேசன் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 28) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 3 செல்போன்கள், ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம் மற்றும், லாட்டரி விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம் பலர் பணத்தை இழந்து நடுத்தெரு வில் தவிக்கின்றனர். இதுபோன்று பல்வேறு நகரங்களில் காவல்துறைக்கு தெரியாமல் நடமாடும் வாகனங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து கொண்டு தான் உள்ளது எனவே காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்ப னை யில் ஈடுபடு வோர் மீது கடும் குற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும் என்கி றார்கள் சமூக ஆர்வலர்கள்.

    Next Story
    ×