என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமருகல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
  X

  மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

  திருமருகல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டிடம்.
  • 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

  நாகப்பட்டினம்:

  திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி மற்றும் காரையூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகங்களை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

  அதுபோல் உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி, மரைக்கான்சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார்.

  இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், திட்டச்சேரி சுல்தான், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×