என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளர் சண்முகம் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
- பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கபிலர்மலை வட்டார அட்மா தலைவரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் கபிலக்குறிச்சி ஊராட்சி துணைத் தலை வர் குணவதி, ஆடிட்டர் சம்பத்குமார், பி.டி.ஏ தலைவர் கோபால், நேரு யுவகேந்திரா ஒன்றிய பொறுப்பாளர் தனபால், தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.