search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்
    X

    பி.ஆர்.பாண்டியன்.

    கொள்முதல் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்

    • நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.
    • நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதலாகும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவில் 3 லட்சம் ஏக்கர் குறுவை விளை நிலங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து விற்பனை செய்து விட வேண்டும்.

    அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். ஆனால் தமிழக அரசு காரிப் பருவ கொள்முதலை செப்டம்பர் 1ஆம் தேதியே தொடங்கியதால் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் தடைபட்டு வருகிறது.

    தற்போது பெய்து வரும் கோடை மழையும் நல்ல காய்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.

    குறிப்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இதுவரையிலும் இல்லாத வகையில் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்கிறோம் எனும் பெயரால் 17 சதம் ஈரப்பதத்திற்கு கூடுதலாக இருக்கும் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்தார்கள் என்று முன் அனுபவமின்றி தொழில்நுட்பத்தினை கருத்தில் கொள்ளாமல் திருவாரூர் அருகே ஊர்குடியில் கொள்முதல் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.குறிப்பாக 15 சதத்திற்கு கீழே உலர்த்தப்பட்ட நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதல் ஆவது என்பது இயற்கையானது.

    பாதுகாக்கப்பட்ட கிடங்குகளில் இருந்தாலும் கூட இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

    விரைவில் ஊழிய ர்களோடு விவசாயிகள் இணைந்து நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×