என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாக்கடை வடிகால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
  X

  சாக்கடை வடிகால் பாலத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்.

  சாக்கடை வடிகால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருசநாடு அருகே பெருமாள் கோவில் தெருவில் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது.
  • பணிகள் நிறுத்தப்பட்டதால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடை வடிகாலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

  வருசநாடு:

  வருசநாடு அருகே பெருமாள் கோவில் தெருவில் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

  பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

  இதனால் தெருவின் குறுக்கே செல்லும் சாக்கடை வடிகால் பாலம் இல்லாமல் திறந்த வெளியில் காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. எனவே இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடை வடிகாலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

  குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் சாக்கடை வடிகாலில் விழுவது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை வடிகால் பாலம் கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×