என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
- குடும்ப தகராறில் விபரீதம்
- தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
புதுக்கோட்டை,
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் தென்னம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று இரவும் பாலசுப்பிரமணியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் வழக்கம் போல கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வேலைக்கு சென்று விட்டார். மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயந்தி தனது பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.