search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை ஊழியர்களுக்கு  தனித்துறை உருவாக்க கோரிக்கை
    X

    ரேசன் கடை ஊழியர்களுக்கு தனித்துறை உருவாக்க கோரிக்கை

    • ரேசன் கடை ஊழியர்களுக்கு தனித்துறை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது


    திருச்சி:

    தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகி தங்க பூமி, திருச்சி மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் சேகர் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜாராம், ராஜா சங்கர், பேரூர் பாலு, ராஜகோபால், கார்த்திகேயன், பெரியசாமி, புவேனஸ்வரி, கோமதி, ரேணுகா, மாலதி, ஜாஸ்மீன், கனகவள்ளி, புனிதா குமாரி, ரேவதி, சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். வருங்காலத்தில் ரேஷன் கடை ஊழியர்களை வேலையில் அமர்த்தும் போது தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் வேலையில் அமர்த்த வேண்டும். நேரடியாக வேலையை அமர்த்த கூடாது. ரேசன் கடை ஊழியர்களுக்கு எழுத்தர் என்று பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    ரேசன் கடை ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை கூட்டுறவு மூலம் வழங்காமல் நேரடியாக அரசு வழங்க வேண்டும். ரேசன் கடைக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும்.ரேசன் கடை ஊழியர்களுக்கு புதிதாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 50 கி.மீட்டருக்கு தூரமாக பணியாற்றும் பணியாளர்களை 10 கி.மீ தூரத்திற்குள் மாற்றி பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகிகள் மலையாளம், கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×