search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் கடத்திய 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    லாரியில் கடத்திய 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • ஆற்காடு போலீசார் அதிரடி
    • லாரி டிரைவரிடம் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே வெளிமாநிலத்தி ற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள ஆனைமல்லூர்

    கிராமத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளிமாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டு இருப்ப தாக திமிரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதல் நிலை காவலர் விஜயகுமார், தனிப்பிரிவு காவலர் பாஸ்கரன், காவலர் சிலம்பரசன், ஆகிய போலீசார் அங்கு சென்று சோதனை யிட்டனர்.

    அப்போது லாரியில் கடத்திச் செல்வதற்கு தயாராக வைத்திருந்த 10 டன் எடை கொண்ட 135 ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரான திமிரியைச் சேர்ந்த சண்முகம் (40) என்பவரை கைது செய்து ராணிப்பேட்டை குடிமைப்பொருள் குற்றப் பிரிவு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத் தனர்.

    அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் குடிமைப் பொருள் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் லாரி மற்றும் ரேசன்அரிசி வாலாஜாவில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    மேலும் லாரி உரிமையா ளர் மற்றும் டிரைவரான சண்முகத்திடம் எங்கிருந்து ரேஷன் அரிசி வாங்கப்பட்டது, எங்கு கடத்திச்செல்லப்பட உள்ளது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்ப வம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×