என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்பல் உற்சவம்
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் தொடங்கியது.
முதல் நாளான நேற்று பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் ஊர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளில் சாமி வலம் வந்தது. பின்னர் தக்கான்குளம் என்னும் பிரம்மதீர்த்த குளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து குளத்தில் சாமி மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story