search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கானூர் பெரிய அம்மன் கோவில் திருவிழா
    X

    பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    கானூர் பெரிய அம்மன் கோவில் திருவிழா

    • கானூர் பெரிய அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • பால்குடம்-முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கானூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 5-ம் ஆண்டாக முளைபாரி மற்றும் பால்குட திருவிழா நடந்தது.

    திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றங்கரையில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி சென்றனர்.

    இதில் 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதேபோல் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதில் கானூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×