என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சாதனை
- அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
விளாத்திகுளம்:
கோவா மாநிலம் வாஸ்கோடாகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாட்டிலிருந்து விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில் பங்கேற்றனர். இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-இந்திய நிறுவன தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் நடுவராக செயல்பட்டார்.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பதங்கங்களை வென்ற மாணவ- மாணவிகளை அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மாா்கண்டேயன் எம்.எல்.ஏ., பள்ளி தாளாளர் வீமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குனர் இந்திரா ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.