search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு
    X

    கோவை மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு

    • கர்நாடகாவில் இருந்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு, தினமும் 200 டன் வெங்காயம் இறக்குமதி ஆகும்.
    • வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததால் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

    கோவை :

    கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட் உள்ளது.

    இங்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மகராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் வருகிறது. குறிப்பாக கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 500 டன் வெங்காயம் இறக்குமதி ஆகிறது. அதில் 80 சதவீதம் அப்படியே கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரு வமழை பெய்துள்ளதால் வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு, தினமும் 200 டன் வெங்காயம் இறக்குமதி ஆகும். தற்போது 50 டன் மட்டுமே இறக்குமதியாகிறது.

    இதன் காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.22க்கு விற்பனையாகிறது.

    அதேபோல கடந்த மாதம் ரூ.30க்கு விற்க ப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இருந்து தக்காளிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் விலையும் உயர்ந்துள்ளது.தற்போது தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.கோவை டி.கே.மார்க்கெட்டிலும் தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்து காணப்பட்டது.

    டி.கே.மார்க்கெட்டில் தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இன்று ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது. நாட்டு தக்காளி கிலோ ரூ.45க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் சின்னவெங்காயம் 3 கிலோ ரூ.100க்கும், பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ.100க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த மாதம் வரை தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த மாதம் விலை அதிகரி த்துள்ளது. வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததால் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொரு ட்களை கூட்டுறவுத்துறை மூலம் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×