என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குமுளி அருகே உடும்பு வேட்டையாடிய கும்பல் கைது
    X

    குமுளி அருகே உடும்பு வேட்டையாடிய கும்பல் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடும்பு வேட்டையாடி சமைத்தது போக மீதியிருந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சமையல் பாத்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே அடிமாலி வாளறகையிங்கல் பகுதியை சேர்ந்த சிலர் உடும்பு வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    மேலும் உடும்பு இறைச்சியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரேஞ்சர் சுனில்லால் தலைமையில் வனத்துறை அலுவலர் முகமது, கோட்ட வன அலுவலர் ஜெயப்பரகாஷ், ராஜூ உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அதில் உடும்பு வேட்டையாடி சமைத்தது போக மீதியிருந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பாபு (50), மனோகரன் (48), மஜேஸ் (20), பொன்னப்பன் (52) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சமையல் பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×