search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட படித்துறைகளில் தாமிரபரணி ஜெயந்தி பெருவிழா- நாளை நடக்கிறது
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட படித்துறைகளில் தாமிரபரணி ஜெயந்தி பெருவிழா- நாளை நடக்கிறது

    • தாமிரபரணியின் புனிதத்தன்மையினையும், நதிநீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி ஜெயந்தி ஆரத்தி பெருவிழா நாளை நடைபெறுகிறது.
    • நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சின்னசங்கரன்கோவில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லுர் உள்ளிட்ட படித்துறைகளில் நடக்கிறது.

    நெல்லை:

    தாமிரபரணியின் புனிதத்தன்மையினையும், நதிநீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய சன்யாசினீஸ் சங்கம் சார்பில் அனைத்து சமய, சமுதாய அமைப்புகள், இயக்கங்கள் கலந்து கொள்ளும் தாமிரபரணி நதியின் ஜெயந்தி ஆரத்தி பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சின்னசங்கரன்கோவில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லுர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்பூவனம், அரியநாயகிபுரம், சேரன்மகா தேவி, கரிசூழ்ந்தமங்கலம், மேலச்செவல், கோபால சமுத்திரம், கருப்பந்துறை, மேலநத்தம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், செப்பரை ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி, உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், ஆத்தூர், தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், முறப்பநாடு, சேர்ந்தபூமங்கலம், ஏரல், ஆழ்வார்திருநகரி, வாழவல்லான், சொக்கபனங்கரை, குரங்கணி, பால்குடி, வெள்ளூர், வல்லநாடு, சீவலப்பேரி, ரெட்டை திருப்பதி, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் நடக்கிறது.

    Next Story
    ×