என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வக்கீல் பெருமாள் சந்திரபோஸ்.
தைப்பூசத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்
- இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் தைப்பூசவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து ஜோதி தரிசனத்தை தரிசிப்பார்கள்.
தஞ்சாவூா்:
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஆண்டுதோறும் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவிழா தைப்பூசம் ஆகும். தைப்பூசம் என்பது நமது மரபில் முக்கிய நாளாகும். தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை ஒட்டி பூச நட்சத்திரத்தை தைப்பூசம் என கொண்டாடுகின்றோம். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் தைப்பூச விழா வெறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மலேசியா, இலங்கை , மொரிசியஸ் ஆகிய நாடுகளில் இவ்விழாவிற்கு அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசம் என்பது முருகக் கடவுளுக்கு உகந்த நாளாக கொண்டாடுவது வழக்கம்.
முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருத்த லங்களில் கோலாகலமாக குறிப்பாக அறுபடை வீடுகளில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனியில் காவடிகள் எடுத்து பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை தைப்பூச நாளன்று முருக பெருமானுக்கு செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் கடலூர் மாவட்டம் வடலூர் ராமலிங்க அடிகளார் உருவாக்கிய சத்திய ஞான சபை தைப்பூச ஜோதி தரிசன விழா வருகின்ற 5-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டு 152 ஆம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது .
இதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் வந்து இந்த ஜோதி தரிசனத்தை தரிசிப்பார்கள் . எனவே தமிழக அரசு சென்னை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் வரும் 5-ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.