என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளம்பெண் மர்மச்சாவு:உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு
  X

  இளம்பெண் மர்மச்சாவு:உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
  • இறந்த கார்த்திகாவுக்கு ஒரு குழந்தை உள்ளதால் கணவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு ஒரு பங்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்-சித்ரா தம்பதியினரின் மகள் கார்த்திகா (வயது22). இவருக்கும் பஞ்சப்பள்ளி உடையாண்டஅள்ளியை அடுத்த பாலம்பட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தையும் உள்ளது.

  இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி அன்று கார்த்திகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

  இதனால் கார்த்திகாவின் சாவில் மர்மம் உள்ளதாக எண்ணி, சித்ரா பஞ்சப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆனநிலையில் கார்த்திகா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதையடுத்து இறந்த கார்த்திகாவுக்கு ஒரு குழந்தை உள்ளதால் கணவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு ஒரு பங்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

  Next Story
  ×