என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லித்துறை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரை தாக்கியவர் கைது
- விவேகானந்தகுமார் கடந்த 1 வருடமாக மது அருந்தி விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார்
- விவேகானந்தகுமாரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சீனிவாசன் (வயது49). இவர் தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இவர் நெல்லித்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் விவேகானந்தகுமார் (வயது48). இவர் கடந்த 1 வருடமாக மது அருந்தி விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். இதுகுறித்து சீனிவாசன் அவரை கூப்பிட்டு அறிவுரை கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சீனிவாசன் தனது மொபட்டில் தங்கவேல் என்பவரது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த விவேகானந்தகுமார் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு மொபட்டையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.