search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உச்ச நீதிமன்றம் சில முடிவுகளை சிந்தித்து அறிவிக்க வேண்டும்:  இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதத்தில் இருக்க வேண்டும்  -கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி பேட்டி
    X

    உச்ச நீதிமன்றம் சில முடிவுகளை சிந்தித்து அறிவிக்க வேண்டும்: இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதத்தில் இருக்க வேண்டும் -கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி பேட்டி

    • இந்திய நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு.
    • இறை யாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதா வது:-

    இந்திய நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. என்றும் தன்னுடைய மத கோட்பாடுகளை

    சொல்லக்கூடிய உரிமை உண்டு. அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய உரிமை எந்த ஒரு மதத்திற்கும் கிடை யாது. சட்டம் ,ஒழுங்கை பராமரிக்க கூடிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு.

    உச்ச நீதிமன்றம் சில முடிவுகளை சிந்தித்து அறிவிக்க வேண்டும்.

    உச்ச நீதிமன்றம் அறி விக்கக் கூடிய அறிவிப்பும், தீர்ப்பும் இந்திய நாட்டின் இறை யாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 'ஓசியில் தானே வந்தீங்க' என்று கேட்டது சமூக வலைதளங்களில் வைரலானது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த நல்லசாமி, ஆளுகின்ற அரசு தனது சொந்த பணத்தில் கொடுத்திருந்தால் சொல்வது நியாயம் என்றும் மக்கள் வரிப்பணத்தில் அமைச்சர் போவதும் ஓசி என்றால் இதுவும் ஓசி தான்.பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×