என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பேக்கரி மீது கல் வீசி தகராறில் ஈடுபட்டவர் கைது
  X

  கோப்புபடம்

  பேக்கரி மீது கல் வீசி தகராறில் ஈடுபட்டவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேக்கரியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது.
  • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த மூக்கையன் என்பவரது மகன் கனகவேல் (வயது 22). இவர் அந்த பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் ரங்கநாதன் ( 26) என்பவர் மது போதையில் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கிடந்த கல்லை எடுத்து பேக்கரி கடை மீது வீசியுள்ளார். இதில் பேக்கரியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது.

  மேலும் இதனை தடுக்க முயன்ற கனகவேலை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதனால் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கனகவேல் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  Next Story
  ×