என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் நகராட்சி கடைகளின் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

- ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும்.
- மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையத்தில் 24 கடைகள், தினசரி மார்க்கெட்டில் 52 கடைகள், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகள் ஆக மொத்தம் 78 கடைகள் மாத வாடகைக்கு விட பொது ஏலம் விடும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிலையில் ஏற்கனவே ஏலத்தில் கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகளும், புதிய வியாபாரிகளும் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, சிறிய கடைகளின் அடிப்படை வாடகையே, ரூ.4ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. மேலும் ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும். அடிப்படை வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட்டால் தான் கடைகளை ஏலம் எடுக்க முடியும்.
தற்போது உள்ள வாடகைக்கு கடையை எடுத்து நடத்த முடியாது எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஏலத்தில் குறைந்தளவே வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இதில் மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.