search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி
    X

    3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி

    • 3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.ேநரு, திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் மூன்று இடங்களில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்பில் அண்ணாசிலை முதல் ஜங்சன் மற்றம் போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை என இரண்டு உயர்மட்ட பாலம் பணிகளையும், தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்ப்பில் காவரி பாலம் முதல் குடமுருட்டி வரையிலான உயர்மட்டப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிலம் ஆர்ஜித கணக்கெடுப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அண்ணா சிலை முதல் ஜங்சன் வரை ரூ.2.7 கோடியும், போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு மருத்துவமனை வரையில் ரூ.1.24 கோடியும், காவிரி பாலம் முதல் குடமுருட்டி வரை ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.5.14 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, உயர்மட்ட பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்வதற்கான கணக்கெடுப்பு பணிகள், மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். டி.பி.ஆர். தயாரான பிறகுதான் பாலம் கட்ட எத்தனை கோடி செலவாகும் என தெரியவரும்.

    மேலும் திருச்சி நகரில் உள்ள ப ாலக்கரை, புத்தூர் சுரங்கப்பாதைகளுக்கு மேல் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது. 9 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையில் இப்பாலம் அமைக்கிறது. இந்த உயர்மட்டப்பாலம் வந்தால் திருச்சியின் தோற்றம் புதுப்பொலிவு பெறுவதோடு, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றார்.

    Next Story
    ×