search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகள்
    X

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகள்

    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில்உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகள்

    திருவெறும்பூர்.

    உலக சுற்றுலா தினமான இன்று, திருச்சி சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை கல்லூரி மாணவர்கள் கொண்டு தூய்மை பணியானது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பரவல் இல்லை இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தாலுகா ஆபீசில் உள்ள இ சேவை மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் தொகை வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×