search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு
    X

    அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு

    • அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
    • மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தலைமை யாசி ரியர்களுக்கு மாவட்ட கலெ க்டர் பழனி உத்தரவு. இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    விழுப்புரம் மாவட்ட த்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட வைகள் தூய்மையாகவும், மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும். பள்ளியில் பழுதான கட்டிடத்தில் மாணவ ர்களை அமரச் செய்யாமல் கட்டாயம் தடுப்பு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செய்ய வேண்டும்.

    அனைத்து நிலை களிலும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கு ம்பொருட்டு (சரிபார்ப்பு பட்டியலைக் கொண்டு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லரின் தலைமையில் 154 அலுவலர்களைக் கொண்ட குழுவினர் 1,492 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருகின்ற ஜுன்1-ம் தேதி முதல் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு முன் அனைத்துப் பள்ளித் தலைமை யாசிரியர்களும் மேற்கண்ட பராமரிப்பு பணிகளை முடித்து பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×