என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் போலீஸ் டி.எஸ்.பி. மாரடைப்பால் மரணம்
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்,
- திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவரது சொந்த ஊர் கடலூர் ஆகும். இவர் இன்று காலை பணிக்காக விழுப்புரம் நோக்கி வந்தார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.
Next Story