என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதை வாலிபரிடம் நகை திருடிய தொழிலாளி கைது
- சரத்குமார் கோயம்பேடு பழ மார்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- சரத்குமார் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கோயம்பேடு பஸ்நிலைய போலீசில் புகார் செய்தார்.
சென்னை:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சரத்குமார்(30). இவர் கோயம்பேடு பழ மார்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவர் மதுபோதையில் பெங்களூரு செல்வதற்காக ஏ.சி. பஸ்சில் பயணம் செய்ய வந்தார். இதனால் அவரை பஸ்சில் பயணம் செய்ய கண்டக்டர் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து சரத்குமார் மதுபோதையில் பஸ் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அருகில் இருந்த மர்ம நபர் திடீரென சரத்குமார் அணிந்து இருந்த ஒரு பவுன் செயினை பறித்தார். சிறிது நேரம் கழித்து உஷாரான சரத்குமார் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கோயம்பேடு பஸ்நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஜோவை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story