search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    மூன்றாம் பிறை ஏன் காணவேண்டும்?
    X

    மூன்றாம் பிறை ஏன் காணவேண்டும்?

    • அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.
    • எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

    அமாவாசைக்கு அடுத்துவரும் திரிதியை அதாவது, மூன்றாம் நாளில் தோன்றும் வளர்பிறையையே மூன்றாம்பிறை என்பார்கள்.

    இந்த மூன்றாம் பிறைக்கு என்ன சிறப்பு என்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் நிலவு தெரியாது. அதற்கு மறுநாள் அதாவது மூன்றாம் நாள்தான் நிலவு மிளிரும்.

    ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது வெட்ட வெளியிடத்தில் இருந்தோ, உயர்ந்த இடத்தில் இருந்தோ, மின் விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது காணலாம். அதன் மெல்லிய ஒளியைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஓர் புத்துணர்வைத் தூண்டும்.

    அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.

    உண்மையில் மூன்றாம்பிறையைக் காணவேண்டும் என்று முன்னோர்கள்கூறக்காரணம்தான் என்ன?

    அமாவாசையின் மூன்றாம் நாளில் மிக மெலிதாகக் காணும் அந்தப்பிறை நிலாவைக் காணும் அளவுக்கு நம்முடைய பார்வைத்திறன் உள்ளதா எனச் சோதிக்கும் ஓர் கண் பார்வை ஆய்வுமுறைதான், இந்த மூன்றாம் பிறை காணுதல்.

    அப்படி அதைக் காணும் அளவிற்கு நம்முடைய பார்வைத்திறன் இருக்குமேயானால், நம் உடல் நலம், மனநலம், குண நலம் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது பொருள்.

    எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதனால் மூன்றாம்பிறை காணலுக்கு ஓர் தெய்வீகத் தன்மையை ஏற்றி, நம்மை இணங்கவைக்கும் உத்தியாகக் கையாள்கின்றனர், ஆன்மிகவாதிகள். மற்றபடி இதனால், வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறு எவையுமில்லை.

    ஆனால் உண்மையில் முழு நிலவைக் காணும்போது உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

    -துலாக்கோல் சோம. நடராஜன்

    Next Story
    ×