என் மலர்

  இந்தியா

  திருப்பதியில் ரூ.4,400 கோடி பட்ஜெட் தாக்கல்
  X

  திருப்பதியில் ரூ.4,400 கோடி பட்ஜெட் தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.
  • பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

  திருப்பதி:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

  2023-24-ம் ஆண்டிற்கான 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

  தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.

  தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

  பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டை சுமார் ரூ.4,400 கோடியில் தயாரித்துள்ளது.

  உண்டியல் மூலம் ரூ.1,591 கோடி வரை வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் உள்ள டெபாசிட் பணம் மூலம் வட்டி சுமார் ரூ.1000 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.500 கோடியும் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  விடுதி வசதிகள், அறைகள், கடைகள் வாடகை என ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால், உண்டியல் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது, அதற்கேற்ப வருடாந்திர பட்ஜெட் மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

  2021-22 ஆம் ஆண்டிற்கான, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு ரூ.2,937.82 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் அளித்தது. இதில், பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

  பிரசாத விற்பனை மூலம், ரூ.375 கோடி, அறைகள், கடைகள் வாடகை மூலம் ஆண்டுதோறும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் அந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது.

  ஒவ்வொரு ஆண்டும் உண்டியல் வருமானம் பெருமளவில் அதிகரிக்கிறது மற்றும் பட்ஜெட் திட்டங்களும் அதிகமாக உள்ளன.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  Next Story
  ×