search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்-  இலவச தரிசனத்துக்காக இரண்டு நாட்கள் காத்திருப்பு
    X

    திருமலையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் 

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்- இலவச தரிசனத்துக்காக இரண்டு நாட்கள் காத்திருப்பு

    • புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்.
    • நேற்று அதிகாலை இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்.

    பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை தரிசனத்திற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் வரை பொறுமை காக்க வேண்டும். பக்தர்கள் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கலாம். அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×