என் மலர்

  இந்தியா

  தம்பியின் காதல் தகராறில் சாப்ட்வேர் என்ஜினீயர் காருடன் எரித்து கொலை
  X

  தம்பியின் காதல் தகராறில் சாப்ட்வேர் என்ஜினீயர் காருடன் எரித்து கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
  • சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பதி:

  திருப்பதி அடுத்த சந்திரகிரி பிராமண பள்ளியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 33). பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நாகராஜன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

  இந்த நிலையில் இன்று காலை அவரது காரில் எரிந்த நிலையில் உடல் கருகி பிணமாக கிடந்தார். கார் எரிந்து நிற்பதை கண்ட அந்த பகுதி மக்கள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கார் நம்பர் மூலம் துப்புதுலக்கினர். அதில் இறந்து கிடந்தது. நாகராஜன் என்பது தெரியவந்தது.

  நாகராஜின் தம்பி புருஷோத்தம் இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.

  இந்த நிலையில் ஊருக்கு வந்த நாகராஜை தம்பியின் காதல் விவகாரம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று இரவில் ஒருவர் போனில் அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற நாகராஜன் வீடு திரும்பவில்லை காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.

  காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக புருஷோத்தம் போலீசில் புகார் செய்துள்ளார்.

  இது தொடர்பாக சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×