என் மலர்
இந்தியா

கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை- 5 ஊழியர்கள் சஸ்பெண்டு
- பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர் வலியுறுத்தி உள்ளனர்.
- 5 பேரையும் சஸ்பெண்டு செய்ய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற நோயாளி பெண் ஒருவருக்கு ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றிய தகவல் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. உடனே அவர் ஆஸ்பத்திரி ஊழியரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர் வலியுறுத்தி உள்ளனர். இதுவும் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் சஸ்பெண்டு செய்ய அவர் உத்தரவிட்டார்.
Next Story