search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இனி எந்த அரசியல் கட்சிக்கும் பணியாற்ற மாட்டேன்- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
    X

    இனி எந்த அரசியல் கட்சிக்கும் பணியாற்ற மாட்டேன்- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன்.

    பாட்னா:

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் அவர் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி குறித்து வியூகம் வகுத்து கொடுக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தொடர்பாக இன்று பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றுவதை நிறுத்திவிட்டேன். மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டு உள்ளேன். பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத், மத்தியபிரதேசம், அல்லது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×