என் மலர்

  இந்தியா

  கடைக்குள் அமர்ந்து கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்
  X

  கடைக்குள் அமர்ந்து கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண் ஒருவர் கடையில் அமர்ந்து மது அருந்தியதும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இளம்பெண்ணும் அவரது தோழிகளும் சேர்ந்து ஜாலிக்காகவும், சமூக வலைதளத்தில் லைக்குகளை பெற இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் மதுபான கடைகளை போல கள்ளுக்கடைகளும் உள்ளன.

  இந்த கடைகளில் மாலை நேரங்களில் ஏராளமான தொழிலாளிகள் அமர்ந்து கள்ளுகுடிப்பது வழக்கம். இந்த கடையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

  இது தொடர்பான தகவல் போலீசாருக்கும் தெரியவந்தது. அவர்கள் கடையில் அமர்ந்து கள்ளு குடித்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்தனர்.

  இதில் அந்த வீடியோ திருச்சூர் அருகே குண்டேலிகடவு பகுதியில் உள்ள கள்ளு கடை என தெரியவந்தது. மேலும் அங்கு கள்ளு குடித்த பெண் பற்றிய விபரங்களும் தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவரும், அவரது தோழிகளும் சேர்ந்து ஜாலிக்காகவும், சமூக வலைதளத்தில் லைக்குகளை பெற இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கு பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

  இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

  இளம்பெண் ஒருவர் கடையில் அமர்ந்து மது அருந்தியதும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×