என் மலர்

  இந்தியா

  திருமண விழாவில் நடனமாடிய மின் ஊழியர் மாரடைப்பால் பலி
  X

  திருமண விழாவில் நடனமாடிய மின் ஊழியர் மாரடைப்பால் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிலர் நடனமாடுவதை பார்த்து உற்சாகம் அடைந்த திலீப்பும் சேர்ந்து அவர்களுடன் நடனமாடி உள்ளார்.
  • மேடையில் ஆடிக் கொண்டிருந்த திலீப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப்ராவுஸ்கர்.

  மின் ஊழியரான இவர் ராஜ்நந்கான் மாவட்டத்தில் உள்ள டோன்கர்கர் என்ற பகுதியில் கடந்த 5-ந்தேதி இரவு நடைபெற்ற தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்றார்.

  அப்போது அங்கு சிலர் நடனமாடி உள்ளனர். இதை பார்த்து உற்சாகம் அடைந்த திலீப்பும் சேர்ந்து அவர்களுடன் நடனமாடி உள்ளார்.

  அப்போது மேடையில் ஆடிக் கொண்டிருந்த திலீப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.

  இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் திலீப்பை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திலீப் இறந்து விட்டதாக கூறினர்.

  இந்நிலையில் மேடையில் திலீப் நடனமாடுவதும், அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

  Next Story
  ×