என் மலர்

  இந்தியா

  ராகுல் பதவி பறிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
  X

  ராகுல் பதவி பறிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
  • வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும்.

  புதுடெல்லி:

  மோடி என்ற சமூகத்தின் பெயரை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.

  அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒருமாத காலத்துக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழக்கப்பட்டு உள்ளது.

  இந்த நிலையில் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

  பாராளுமன்ற மக்களவை செயலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

  இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  அந்த பொதுநல மனுவில், "வழக்குகளில் தண்டனை பெற்றவுடன் உடனடியாக தகுதி நீக்கம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) சட்ட விரோதமானது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். எம்.பி.-எம்.எல்.ஏ.க்களை உடனே தகுதி நீக்கம் செய்யக்கூடாது" என்று கூறப்பட்டு உள்ளது.

  Next Story
  ×