search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலைக்கு ஏரியில் இருந்து மணல் எடுப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலைக்கு ஏரியில் இருந்து மணல் எடுப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொன்னேரி அருகே உள்ள ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் விதிமுறையயை மீறி சுமார் 20 அடி ஆழம் மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வெளியிடங்களுக்கு முறைகேடாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

    ஏரியில் மணல் அள்ளப்படுவதால் சுற்றி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட மான சூழ் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏரியில் மணல் அள்ளுவது தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×