search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி பகுதியில் ஆவின் பால் வினியோகம் தாமதம்- பொதுமக்கள் பாதிப்பு
    X

    பொன்னேரி பகுதியில் ஆவின் பால் வினியோகம் தாமதம்- பொதுமக்கள் பாதிப்பு

    • பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    பொன்னேரி:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு வேன்களில் கொண்டு வரப்படும் ஆவின் பால் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டு அங்கிருந்து வியாபாரிகளுக்கு வினியோகிப்பது வழக்கம்.

    இதில் பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இன்றுகாலை 9 மணி வரை ஆவின் பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் நீண்டநேரம் காத்திருந்தனர். ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து ஆவின் ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் பால் பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டு செல்லப்படும் டப்புகள் அதிகமாக உடைந்து காணப்படுகிறது. இதனால் குறைவாக டப்புகள் உள்ளன. அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று வரும் அந்த டப்புகளை மீண்டும் பயன்படுத்தி எடுத்து செல்வதால் ஆவின்பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. புதிய டப்புகள் வருகிற திங்கட்கிழமை வருகிறது. அதுவரை இந்த காலதாமதம் இருக்கும் என்றார்.

    Next Story
    ×