search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து மழை- சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தொடர்ந்து மழை- சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 138 கனஅடிதண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 6 ஆயிரத்து 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நீர்வரத்து இல்லாமல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கு 65 கனஅடி தண்ணீர் வருகிறது. கன மழையாக தொடர்ந்து நீடித்தால் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி 78 சதவீதம் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645மி.கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,845 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 143 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரியில் இருந்து 204 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. ஏரியில் தற்போது 605 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 75 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 138 கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 25 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×