என் மலர்

  தமிழ்நாடு

  கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மதுரை வாலிபர்கள் கைது
  X

  கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மதுரை வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடைக்கானல் போலீசார் பைக் திருடர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • கைது செய்யப்பட்ட 2 பேர் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 20ந் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்திச்சென்றார். மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்தபோது அந்த பைக் திருடுபோனது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் பைக் திருடர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்பேரில் பழனி டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசக்தி தலைமையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ், போலீசார் சரவணக்குமார், காசிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  பல்வேறு இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மதுரையை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. இதில் மதுரை காளவாசல், சம்மட்டிபுரம், தத்தனேரி, துவரிமான், கோச்சடை பகுதிகளைச்சேர்ந்த மணிகண்டன் (வயது21), வினோத் (28), ஸ்டீபன்ராஜ் (19) உள்ளிட்ட 5 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

  இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, வாகன திருட்டு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவதாகவும் கொடைக்கானலில் பதுங்கி இருந்து செலவுக்காக அடிக்கடி பைக் திருட்டில் இடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×