என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

ஐ.டி.ஐ. மாணவன் கழுத்தை அறுத்து கொலை வீட்டில் தூங்கிய போது நடந்த சம்பவம்

- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கொடியாலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர் பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் இரவு கோகுல் மற்றும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் வீட்டில் புழுக்கமாக இருந்த காரணத்தால் கதவுகளை திறந்து வைத்து அண்ணன், தம்பி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தக்க தருணம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர்.
இதில் துடிதுடித்த அவர் வேதனை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே ஓடி வாசலில் விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கோகுலின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது மூச்சு அடங்கிவிட்டது.
இது குறித்து ஜீயபுரம் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கோகுல் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐடிஐ மாணவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.