search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பாடப்பகுதி நீக்கம்
    X

    6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பாடப்பகுதி நீக்கம்

    • 6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்து பாடப்பகுதி உள்ளது.
    • ஆன்லைன் விளையாட்டினால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த விளையாட்டினால் பலர் உயிர் இழந்துள்ள நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பகுதி நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்து பாடப்பகுதி உள்ளது. அதனை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் சர்ச்சைக்குரிய ரம்மி விளையாட்டு பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து முழுமையாக நீக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்மி விளையாட்டு பாடப்பகுதி இந்த கல்வி ஆண்டில்தான் சேர்க்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைன் விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில் பாடப்புத்தகத்தில் இடம் பெறுவது முறையாக இருக்காது எனக்கருதி இந்த நடவடிக்கையை கல்வித்துறை எடுத்துள்ளது.

    Next Story
    ×