search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    17-ந் தேதி எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது
    X

    17-ந் தேதி எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது

    • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.
    • கடந்த 3-ந்தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

    20 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1960 பி.டி.எஸ். இடங்களில் 1254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்தம் உள்ள 9508 அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.

    7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 569 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ந்தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை பணிகள் தொடங்கி உள்ளன. மாணவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்கள், ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

    இந்த பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும். இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    வருகிற 17-ந் தேதி முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு 10-ந்தேதி தொடங்குகிறது. இது ஒரு வாரம் வரை நடைபெறும். அது முடியும் போது தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×