என் மலர்

  தமிழ்நாடு

  25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X

  25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

  சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

  பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

  இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார்.

  கதர் ஆடை அணிந்து நாடு முழுவதும் சுற்றினார். காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் பெரியார். கோட்சாவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

  அண்ணாவும் காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கருணாநிதியும் காந்தி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்.

  திராவிட இயக்கத்தின் மதிப்பு கொண்டவர் காந்தியின் பேரன் போபால கிருஷ்ண காந்தி. பெரியாரின் லட்சிய அரசியலை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அண்ணா, கருணாநிதி என சொன்னவர் காந்தி பேரன்.

  காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். தமிழக அரசே கருணாநிதி தான். திமுக ஆட்சியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கிறோம்.

  கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி சாதனைகளை விளக்கும் விழாவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

  தொலைநோக்கு பார்வை, மக்கள் மீது பற்றும் கொண்ட தலைவராக கருணாநிதி இருந்தார். கருணாநிதி தொடாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். கருணாநிதி வகுத்த பாதையில் தான் அனைத்து துறையும் பயணிக்கிறது.

  உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

  தலைநகர் சென்னையில் உலகதரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். 25 ஏக்கர் பரப்பளவில், 5000 நபர்கள் அமரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்ஷன் சென்னை அமையவுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×