என் மலர்

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி- 4 பேர் படுகாயம்
    X

    கொடைக்கானலில் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி- 4 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பால் இனிப்பு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு இன்று கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • லாரி வாழைகிரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    கொடைக்கானல்:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (26). இவர் கோவையில் உள்ள பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் வினியோகிக்கும் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    பால் இனிப்பு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு இன்று கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மேலாளராக மாரிமுத்து மற்றும் சிவகுரு, தினேஷ்குமார் ஆகியோரும் இருந்தனர். லாரி வாழைகிரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனால் லாரிக்குள் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிவகுரு மற்றும் தினேஷ்குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×