search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் பழிவாங்கும் நடவடிக்கைக்காக உணவில் தைலத்தை கலந்த பெண் கைது
    X

    கைது செய்யப்பட்ட மலர்விழி.

    கொடைக்கானலில் பழிவாங்கும் நடவடிக்கைக்காக உணவில் தைலத்தை கலந்த பெண் கைது

    • மலர்விழி கொடைக்கானல் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணி செய்து வந்தார்.
    • கொடைக்கானல் போலீசாருக்கு பணியாளர்கள் புகார் அளித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த அனிஸ் மனைவி மலர்விழி(47). இவர் அதேபகுதியில் உள்ள கொடைக்கானல் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணி செய்து வந்தார்.

    அங்கு சமைக்கப்படும் உணவின் மீதியை அடிக்கடி வீட்டுக்கு எடுத்து செல்வதை பாதுகாவலர்கள் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சமையல் பிரிவில் இருந்து மாற்றப்பட்டு வேறு பணிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மலர்விழி சமையல் பிரிவிலிருந்து தன்னை மாற்றுவதற்கு காரணமாக இருந்த பணியாளர்கள் மீது கோபம் கொண்டு பழிவாங்க திட்டம் தீட்டினார்.

    அதன்படி பணியாளர்கள் பணியை முடித்து மதிய உணவு அருந்த சென்றபோது மலர்விழி தான் மறைத்து வைத்திருந்த உயிர்பறிக்கும் வின்டர்கிரின் தைலத்தை உணவில் கலந்துள்ளார். இதை சாப்பிட்ட பணியாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் தைலத்தின் வாசனை தெரிந்ததால் சாப்பிடுவதையும் நிறுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து உணவருந்திய பலரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு குணமடைந்தனர்.

    இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு பணியாளர்கள் புகார் அளித்தனர். கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து உணவில் மலர்விழி தைலத்தை கலந்ததை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×