search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐபோன்களில் ரகசிய மென்பொருள் - அமெரிக்கா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு!
    X

    ஐபோன்களில் ரகசிய மென்பொருள் - அமெரிக்கா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு!

    • ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம்.
    • ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.

    ரஷிய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷியாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும்.

    "ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்," என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தெரிகின்றன.

    ரஷிய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. "ஆப்பிள் சாதனங்களில் பேக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்," என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×