search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இரு நாள் பயணமாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ரஷியா சென்றடைந்தார்
    X

    ரஷியாவில் மந்திரி ஜெய்சங்கர்

    இரு நாள் பயணமாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ரஷியா சென்றடைந்தார்

    • ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    • ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    மாஸ்கோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரு நாள் பயணமாக ரஷியா சென்றடைந்தார். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    முக்கியமாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர்.

    ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    கடந்த ஆண்டும் ஜெய்சங்கர் ரஷியா சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து ரஷிய வெளியுறவு மந்திரி கடந்த ஏப்ரலில் இந்தியா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×