என் மலர்

  உலகம்

  நிதி மோசடி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
  X

  நிதி மோசடி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது ஆகிய வழக்குகளில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானதால் அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

  இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உயர்மட்ட விசாரணை அமைப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு இரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.

  Next Story
  ×