search icon
என் மலர்tooltip icon

    ஓமன்

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது
    • இதில் நேபாள வீரர் திபேந்திர சிங் டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.

    அல் அமிராட்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

    ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் ஷூட் அவுட் முறையில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.

    சலாலா:

    அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கு தகுதிச்சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது.

    இந்தப் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    சலாலா:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது.

    இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

    போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் அரிஜித் சிங் ஹுண்டால் ஒரு கோலும் அடித்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் அப்துல் பஷாரத் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஏற்கனவே 2004, 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மஸ்கட் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) ஆலோனை நடத்தி வருகிறது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து புகை வெளியேறியது. இதில் விமானத்தில் இருந்த 14 பயணிகள் காயமடைந்தனர்.

    மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக அவசர கால வெளியேறும் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

    அவசரகால சூழ்நிலையைத் தொடர்ந்து மஸ்கட் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) ஆலோனை நடத்தி வருகிறது.

    இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மஸ்கட் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் 2-ல் புகை வெளியேறுவதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×