search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    இலங்கை மருத்துவமனையுடன் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.

    ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் கீழ் இயங்கி வரும் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன், முன்னிலையில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி டீன் கொட்டூர், மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இயக்குனர் டாடர் சரவணமுத்து பூலோகநாகன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுகாதார பாதுகாப்பு வழங்கல், சுகாதார பாதுகாப்பு கல்வியை நிறுவுதல், மேம்படுத்துதல், வெளிநாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கல், ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், சுகாதார பணி யாளர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு நிதி உதவி செய்யப்படும்.

    Next Story
    ×