search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
    • அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள சொரப்பூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமம், மாக சாந்தி ஹோமம், முதல் யாகசாலை பூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை கலச புறப்பாடு நடைபெற்று, திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

    பின்னர் மூலவர் மற்றும் சுற்றுப்புர பரிகார மூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சொரப்பூர் மற்றும் வடுக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    Next Story
    ×